"தற்கொலை தடுப்பு" பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்றைய தினம் நடைபவனியொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தாய்க்கழகமாகிய நல...
"தற்கொலை தடுப்பு" பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்றைய தினம் நடைபவனியொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தாய்க்கழகமாகிய நல்லூர் றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறக்ட் கழகமும் இணைந்து இந்த நடைபவனியை முன்னெடுத்தனர். குறிப்பாக தற்கொலை தடுப்பு திட்டத்தை நோக்காகக் கொண்டு கொழும்பிலிருந்து புறப்பட்ட 40 பேர் அடங்கிய குழுவொன்று சைக்கிளில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் உயிரின் மதிப்பை எடுத்தியம்பும் வகையில் தற்கொலையை தடுக்கும் வகையில் 1333 எனும் எண்ணையும் அறிமுகப்படுத்தினர். அந்த வகையில் 40 பேர் அடங்கிய குழு யாழ். வருகை தந்து மாலை 5 மணிக்கு jetwing ஹோட்டல் இருந்து புறப்பட்டு 5.40 மணிக்கு நல்லூர் வரையில் நடைபவனியாக சென்று இந்த திட்டத்தை யாழில் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர.