ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்களினால் வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணி முதல...
ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்களினால் வெற்றியீட்டியது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் இப்ரஹிம் சட்ரன் ஆட்டமிழக்காது 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பதிலுக்கு 292 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களை பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் மெக்ஸ்வல் ஆட்டமிழக்காது 201 ஓட்டங்களை பெற்று, அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மெக்ஸ்வலின் ஆபார ஆட்டத்தின் ஊடாக, அவுஸ்திரேலிய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.