இலஞ்ச ஊழல் குற்றம் தொடர்பில் நடப்பாண்டில் நவம்பர் மாதம் வரை 3,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சா...
இலஞ்ச ஊழல் குற்றம் தொடர்பில் நடப்பாண்டில் நவம்பர் மாதம் வரை 3,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஜனவரி 01 முதல் 2023 நவம்பர் 21 வரை மொத்தம் 3,255 முறைப்பாடுகள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெறப்பட்ட முறைப்பாடுகளில் பெரும்பாலானவை அரச உத்தியோகத்தர்களின் நடத்தை சம்பந்தமானவை எனவும், ஏறக்குறைய 100 முறைப்பாடுகள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக ஏறக்குறைய 50 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எனவே, குறித்த ஆணைக்குழுவிற்குள் உள்ள வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது, இதன் மூலம் பெறப்பட்ட முறைப்பாடுகளுக்கு விசாரணைகளை தொடர முடியும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.