யாழில் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் இணைய மோச...
யாழில் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் இணைய மோசடி மூலம் இருவர் தலா 20 லட்சம் மற்றும் 6 லட்சம் என மொத்தமாக 26 லட்சம் ரூபாயை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரமும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாயை இழந்த நிலையில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறான இணைய மோசடியாளர்களிடம் சிக்காது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய பொலிஸார், இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.