களனிப் பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டுள்ள பீடங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதன்படி, தற்போது மூடப்பட்டுள்ள விஞ்ஞான பீடம், முகாமை...
களனிப் பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டுள்ள பீடங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இதன்படி, தற்போது மூடப்பட்டுள்ள விஞ்ஞான பீடம், முகாமைத்துவ பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பன கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று முதல் திறக்கப்படும் என அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடந்த 5. ஆம் திகதி பலவந்தமாக கடத்திச் சென்று தாக்கிய சம்பவத்தையடுத்து, மருத்துவ பீடம் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.