யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதன்போது ஆலயத்தில் அமைக்கப்பட்ட இயேசு பாலன் பிறப்பை வெளிப்படுத்த...
யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதன்போது ஆலயத்தில் அமைக்கப்பட்ட இயேசு பாலன் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களால் ஒளியேற்றப்பட்டது.
யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேரனாட் ஞானப்பிரகாசத்தினால் நத்தார்விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
நத்தார் விசேட திருப்பலி நிகழ்வில் யாழ் மறை மாவட்ட குரு முதல்வர், அருட்தந்தையர்கள் ,வடமாகாண ஆளுநர், மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.