ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆபாச படங்கள் ...
ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், ஆபாச படங்கள் எளிதில் கிடைப்பதால் இந்த தலைமுறையினர் அதற்கு அடிமையாகி விடுவதாக தகவல் தெரிவித்தது.
ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம்.
90களில் பிறந்த குழந்தைகள் எப்படி மது, புகைக்கு அடிமையாகியிருந்தார்களோ, அதேபோல 2000 ஆண்டில் பிறந்த குழந்தைகள் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்
பாடசாலைகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பருவ வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.