இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கட்சியின் மூத்த தலைவர் பாராளுமன்ற உறுப்பின...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கட்சியின் மூத்த தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை மரியாதை நிமித்தம் சந்தித்து ஆசி பெற்றார்.
இருவருக்கும் இடையிலான குறித்த சந்திப்பு கொழும்பில் திங்கட்கிழமை (22) நடைபெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் ஞாயிற்றுக்கிழமை (21) சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார்.