ஐ.பி.எல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (23) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டில்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. குறித்த போட்டியின் நாணய சுழற்...
ஐ.பி.எல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (23) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டில்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.
துடுப்பாட்டத்தில் டில்லி அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 25 பந்துகளில் 33 ஓட்டங்களை ஷாய் ஹோப் பெற்றுக்கொடுத்ததுடன் அபிஷேக் போரல் 32 ஓட்டங்களை 10 பந்துகளில் பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்ததுடன் ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி , டில்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 292 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.