இலங்கையின் நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துட...
இலங்கையின் நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் அவ்வாறு நாணயத் தாள்களை சேதப்படுத்துவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகையான பணமும் அபராதமாக விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.