வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் இன்று அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அரச த...
வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் இன்று அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அரச தலைவர் செயலகத்தில் வைத்து இன்று (12) நண்பகல் ரணில் விக்ரமசிங்க வழங்கினார்.
எதிர்வரும் 15.03.2024 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்குவரும்வகையில் வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக அரச தலைவர் செயலகத்தின் மேலதிக செயலாளர் எல். இளங்கோவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் பதவிகளில் பணியாற்றிய நிலையிலும், நீண்ட காலம் தொடர்ச்சியாக வடக்கில் பணியாற்றியவர் என்பதன் அடிப்படையில் கொழும்புக்கு இளங்கோவன் இடமாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரச தலைவர் செயலகத்தின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய எல்.இளங்கோவன் வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண தலைமைச் செயலாளராக இதுவரை பணியாற்றிய சமன் பந்துலசேன அரச தலைவரின் விடேச செயலாளராக கொழும்புக்கு மாற்றப்பட்டள்ளார்.