ஐ.பி.எல் 2024இல் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய டில்லி கேப்ப...
ஐ.பி.எல் 2024இல் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய டில்லி கேப்பிட்டல்ஸ் 191 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்க நோக்கி துடுப்பெடுத்தாடிய சி.எஸ்.கே. 7 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. மேலும் 171 ஓட்டங்களை மட்டுமே அவ்வணியால் பெற முடிந்தது.
இதனால் டில்லி கெப்பிட்டல்ஸ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் டில்லி கெப்பிட்டல்ஸ் அணி பந்து வீசவில்லை எனத் தெரியவந்தது. இதனால் அணித்தலைவர் ரிஷப் பண்ட்டுக்கு ஐ.பி.ல். 12 இலட்சம் இந்திய ரூபாய்(இலங்கை மதிப்பில் 4,321,262.44) அபராதம் விதித்துள்ளது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள டில்லி முதன்முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. இதனால் கடைசி 2 ஓவரின்போது பவுண்டரில் எல்லையில் நான்கு வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.