இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 47வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 47வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் இந் நிகழ்வு இன்று(26) காலை நடைபெற்றது.
தந்தை செல்வாவின் தூபிக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் "இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும்" எனும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார்