கொரியாவில் தொழில்வாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ...
கொரியாவில் தொழில்வாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (04) கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி சம்பவம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்னவுக்கும், அவரது கணவருக்கும் வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நேற்று (03) தடை விதித்திருந்தார்.
அத்துடன், நடிகை தமிதா அபேரத்னவும், அவரது கணவரும் தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவும் நேற்று முன்தினம் மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்றைய தினம் அவர்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்