பொது தமிழ் வேட்பாளர் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று (12) யாழ்ப்பாணத்தில் உள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனின் இ...
பொது தமிழ் வேட்பாளர் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று (12) யாழ்ப்பாணத்தில் உள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மாத்திரம் கலந்து கொண்டனர்.
இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் பொது தமிழ் வேட்பாளர் ஒருவரை மாத்திரம் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், அவர் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை என அறிய முடிகின்றது.
அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்துரையாடலிற்கு வருவதாகக் கூறியிருந்த நிலையில் குறித்த கலந்துரையாடலைப் புறக்கணித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளிநாடு சென்றுள்ளதால் அவரும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லை.
குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் மாத்திரமே, அரசியல்வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.