பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கச்சதீவு தொடர்பில் முன்வைத்துள்ள கருத்துக்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கிராமி...
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கச்சதீவு தொடர்பில் முன்வைத்துள்ள கருத்துக்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இன்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அதன் தலைவர், செல்லத்துரை நற்குணம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
தமிழக மீனவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட விடயம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் காங்கிரஸ் கட்சியையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விமர்சித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.