ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர்கள், அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர்கள், அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இதன்போது, அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைந்துகொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 6 உறுப்பினர்கள் தொடர்பில், தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.