ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தனது எக்ஸ...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தனது எக்ஸ் (X) பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உண்மையான நண்பரான ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எப்போதும் நினைவுகூரப்படுவார் என சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, இலங்கையில் உள்ள ஈரான் தூதரகத்திற்கும் சென்று தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவும் இலங்கையில் உள்ள ஈரான் தூதரகத்துக்குச் சென்று தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.