ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு யோசனை முன்வைக்கப்பட வேண்டுமென ஐக்கிய...
ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு யோசனை முன்வைக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது இதற்கு எம்.ஏ.சுமந்திரனும் இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு முரணானது என எதிர்ப்பு தெரிவித்தார்.
எம்.ஏ.சுமந்திரனும் இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு முரணானது என எதிர்ப்பு தெரிவித்தார்.
22 ஏப்ரல் மற்றும் ஜூலையில் நடந்த தெருப் போராட்டங்களின் போது கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து அகற்றப்பட்டபோது, SLPP க்குப் பிறகு விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவை எஞ்சிய காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார்.
தேவையேற்படின், மக்கள் கருத்துக்கணிப்பின் ஊடாக அதனை நிறைவேற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சியடைச் செய்வதற்கான இயலுமை தற்போதைய ஜனாதிபதிக்கு காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அனைவரும் இணைந்து இவ்விரு தேர்தல்களையும் ஒத்திவைத்து, ஜனாதிபதியின்/ பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் 5 அல்லது 2 வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைப்பது சிறந்ததென தாம் எண்ணுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தலை ஒத்திவைப்பதற்கான இந்த யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.