இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரன (Matheesha Pathirana) லங்கா பிரீமியர் லீக் (LPL) வரலாற்றில் அதிகபட்ச தொகையான 120,000 அமெரிக்க ...
இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரன (Matheesha Pathirana) லங்கா பிரீமியர் லீக் (LPL) வரலாற்றில் அதிகபட்ச தொகையான 120,000 அமெரிக்க டொலர்களுக்கு (3.5 கோடி இலங்கை ருபாய்) கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் (Colombo Strikers) அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் ஏலம் இன்று (21.05.2024) கொழும்பில் (Colombo) நடைபெற்று வருகின்றது.
அத்துடன், இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக (Dasun Shanaka) 85,000 அமெரிக்க டொலர்களுக்கு (2.5 கோடி ருபாய்) கண்டி அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
ரைலி ரோசோவ்
அதற்கு அடுத்தபடியாக, தென்னாபிரிக்க வீரர் ரைலி ரோசோவ் (Rilee Rossow) 60,000 அமெரிக்க டொலர்களுக்கு ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியால் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.