சம்பள அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், 2024ம் ஆண்டு அது குறித்து நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு அரச வரும...
சம்பள அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், 2024ம் ஆண்டு அது குறித்து நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு அரச வருமானம் அதிகரிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பாராளுமன்றத்தின் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2024ம் ஆண்டு பொருளாதாரம் வளர்ச்சியடையும் விதம் மற்றும் அரச வருமானம் அதிகரிக்கும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பது தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் கூறுகின்றார்.
இதன்படி, அடுத்த வருடம் இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.