2024ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி துக்கத் தினமாக இலங்கை அறிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில்...
2024ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி துக்கத் தினமாக இலங்கை அறிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில் துக்கத் தினத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.