இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத...
இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் குறித்த சந்தேகநபர் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அவர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கடந்த 20ஆம் திகதி குறித்த 4 சந்தேகநபர்களும் இந்தியாவின் அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கைதான சந்தேகநபர்கள் போதைப்பொருள் மற்றும் தங்கக் கடத்தல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைதானவர்களில் பாதாள உலகக் குழுத் தலைவரான பொட்ட நௌபர் எனப்படும் நியாஷ் நௌபரின் மகனும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேநேரம், மொஹமட் நுஷ்ரன் தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் டுபாயில் வைத்து இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மொஹம்மட் பாரிஸிற்கு போதைப்பொருள் தொடர்பான 3 வழக்குகள் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் மொஹம்மட் நப்ரான் நௌபருக்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்கள் பாகிஸ்தானின் அபு எனப்படும் நபர் ஒருவரினால் வழிநடத்தப்பட்டிருந்த நிலையில், அஹமதாபாத் மைதானம் உள்ளிட்ட பொது இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.