இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் உபாதைக்குள்ளான இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் மதீஷ பத்திரன, எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் உபாதைக்குள்ளான இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் மதீஷ பத்திரன, எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு முழு உடற் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் இன்று(13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, தேர்வுக்குழுத் தலைவர் உபுல் தரங்கவிடம் அது தொடர்பில், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு பதிலளித்த அவர், இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் முழுமையாக பங்கேற்பதற்கான தகுதியினை அவர் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மதீஷ பத்திரன, உபாதை காரணமாக நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி பகுதியில் இருந்து விலகியிருந்தார்.