பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள் , அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு எனும் ...
பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள் , அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு எனும் தலைப்பில் ஒரு நாள் செல்லுபடியாக்கல் பயிற்சிப்பட்டறை , 13.06.2024 , யாழ் மாவட்ட செயலக, மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் , இலங்கையின் வடக்கு மாகாணத்தில் , கிறிசலிஸ் நிறுவனம
நடைமுறப்படுத்தும் பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தல் கருத்திட்டத்தின் ஓர் அம்சமாக முன்னெடுக்கப்பட்ட மேற்படி பயிற்சிப்பட்டறையில் அரச அதிபர், உதவி அரச அதிபர், உதவி செயலாளர் - வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு , மாவட்ட மகளிர் அபிவிருத்தி அலுவலர் , மாவட்ட அரச சார்பற்றநிறுவனங்களின் இணைப்பாளர், மனித உரிமை ஆணைகுழுவின் பிரதிநிதி, உள்பட பல துறை சார் அரச அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.