திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன இஸ்ரேல் நாட்டு யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்ப...
திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன இஸ்ரேல் நாட்டு யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்றினால் இந்த யுவதி கண்டுபிடிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் பி.மதனவாசன் ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய சுற்றுலா பயணியே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
காணாமல் போயிருந்த இந்த யுவதி, மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவேலி பிரதேச சபை, சுற்றுலாப் பணியகம் ஆகியவை மீட்பு பணி ஈடுபட ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.
ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய, குறித்த தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு, மர்மமான முறையில் காணாமல் போன பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளார்.
முள் தாவரங்களுக்கு மத்தியில் மயங்கிய நிலையில் இந்த யுவதி இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுவதியின் உடம்பின் வெளிபுறத்தில் மாத்திரம் காயங்கள் காணப்படுவதாக தெரியவருகின்றது.
குறித்த சுற்றுலா பயணி மருத்துவ பரிசோதனையின் பின், அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த யுவதி தற்போது திருகோணமலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.