ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைளுக்காக, தேர்தல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசரங்க கரவி...
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைளுக்காக, தேர்தல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசரங்க கரவிடவுக்கு மேலதிகமாக மேலும் ஒரு பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதி பொலிஸ்மா அதிபர் பீ.லியனகே மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கே.டீ.ஜீ.எல்.ஏ தர்மசேன ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொலிஸ் தலைமையகத்தில் தேர்தல் விவகாரங்களுக்காக விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த பிரிவுக்கு பொறுப்பதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.