இன்றைய தினம் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் வெவ்வேறு இடங்களில் விபத்துக்குள்ளாகி உள்ளது. எம்.பி ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனமும்,...
இன்றைய தினம் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் வெவ்வேறு இடங்களில் விபத்துக்குள்ளாகி உள்ளது.
எம்.பி ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனமும், டிலான் பெரேரா பயணித்த வாகனங்களுமே விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இன்று (13) மத்துகமவில் கூட்டம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது தெற்கு அதிவேக வீதியின் 82/1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் கார் விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
கனமழை காரணமாக கார் சறுக்கி நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த சொகுசு வாகனமும் புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் வைத்து இன்று விபத்துக்குள்ளாகியிருந்தது.
ரிஷாத் பதியுதீன் அநுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த போது, பிரதான வீதிக்குள் திடீரென பிரவேசித்த மோட்டார் சைக்கிள் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த சொகுசு வாகனம் மீது மோதாமல் இருக்க சாரதி முயற்சித்ததில் குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்