5 ஆவது முறையாக இடம்பெறும் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (01) பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள...
5 ஆவது முறையாக இடம்பெறும் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (01) பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
முதல் போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ள நிலையில், போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டித் தொடரின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கேல் கிளார்க்கும் இன்றைய போட்டியில் பங்கேற்கவுள்ளார்.