யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பதிவாளர் திணைக்களத்தில் போட்டோ பிரதி இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர...
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பதிவாளர் திணைக்களத்தில் போட்டோ பிரதி இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
பதிவாளர் திணைக்களத்தில் உள்ள போட்டோ பிரதி இயந்திரம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பழுதடைந்துள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக போட்டோ பிரதி இயந்திரம் பழுதடைந்துள்ளதால் காணிகளுக்கான தோம்பு மற்றும் உறுதி பிரதிகளை பெறமுடியாமல் பொதுமக்கள், சட்டத்தரணிகள் மற்றும் நொத்தாரிசுகள் கூட பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் பல நூற்றுக்கணக்கான பொது மக்களின் நேரம் வீண்விரயமாவதோடு பலர் தங்களுடைய கருமங்களை மேற்கொள்ளமுடியாது உள்ளதாக கவலைவெளியிட்டுள்ளனர்.
அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக போட்டோ பிரதி இயந்திரம் பழுதடைந்துவருவதால் பல கோப்புகள் தேக்கநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.