நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதற்கட்ட பணிகள் குறித்து இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல்...
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதற்கட்ட பணிகள் குறித்து இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தலைமையில் தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள், பிரதி மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதற்கு ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஏற்பாடு செய்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.