இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் ...
இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு-10 பகுதியில் வசிக்கும் வர்த்தகரான இவர், டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் இன்று காலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர், சட்டவிரோதமான முறையில் இந்த சிகரெட் மற்றும் இ-சிகரெட்டுகளை கொண்டு வந்த நபரை, அவற்றை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.