கம்பஹா, கடவத்தைவில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை அதிகாரிகள் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது பலர் கைது செய்யப்ப...
கம்பஹா, கடவத்தைவில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை அதிகாரிகள் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது பலர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சுமார் 200இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்கேற்றிருந்ததுடன், அவர்களில் சிலர் ஒழுக்ககேடாக மேலாடையின்றி இருந்ததாகவும் அதிகாரிகள் தெரித்துள்ளனர்.
இந்நிலையில் விருந்தில் கலந்துகொண்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
ஒழுக்ககேடான நிகழ்வுகள்
18 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களே கலந்து கொண்ட இந்த விருந்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் கடற்கரையோரங்களில் இவ்வாறான ஒழுக்ககேடான நிகழ்வுகள் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது மண்டபங்களை ஒழுங்கு செய்தும் நடத்தும் அளவுக்கு மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே இவ்வாறான நிகழ்வுகளில் பிள்ளைகள் கலந்து கொள்வது குறித்து பெற்றோர் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை மாத்தறையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய போதைப்பொருள் விருந்து ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. சுமார் 600இற்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்ட நிலையில் போதைப்பொருளுடன் 25 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.