இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாத...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றபோது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவும், தமிழ் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை போட்டியில் இருந்து விலகுமாறு கோரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் யெப்னா கலரிக்கு தொலைபேசி வாயிலாக கருத்து தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், நான் சுகவீனம் காரணமாக ஓய்வில் இருப்பதால் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை – என்றார்.