ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இரவு யாழ்ப்பாணம் க...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இரவு யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என நம்புவதாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.