எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக...
எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
கொழும்பு மலர் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளையும் இந்த பொது கூட்டணியில் இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்