நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள கடவுச்சீட்டு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித...
நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள கடவுச்சீட்டு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் உரியத் தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 அல்லது 16ஆம் திகதிக்குள் இந்த வரிசைகளை இல்லாமல் செய்ய முடியும் எனவும் புதிய கடவுச்சீட்டு முறைமையை அறிமுகப்படுத்த முடியும் எனவும் எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் அந்தப் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று தற்போது ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசை இல்லாமல் செய்வதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.