திட்டமிடல் ஒன்றுடனேயே தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...
திட்டமிடல் ஒன்றுடனேயே தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹியங்கனையில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"நான் நன்றி கூறுகிறேன். உங்களுக்காக நிற்கும் உங்கள் தலைவருடன் தாய்நாட்டின் வெற்றியை உறுதிப்படுத்த நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி. எங்களிடம் தொலைநோக்கு பார்வையும் திட்டமிடலும் உள்ளது. நாங்கள் வெறும் அதிகாரத்திற்காகவோ தேர்தலுக்காகவோ போட்டியிடவில்லை. வெற்றி பெறுவதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறோம். வெற்றி பெற்று நாட்டை கட்டியெழுப்புவோம். எங்களிடம் சரியான திட்டமும் ஏற்பாடும் உள்ளது" என்றார்.