பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள...
பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.