வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் ந...
வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி புதிய கடவுச்சீட்டின் நிறம் நீல நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்களும், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்களும் உள்ளன.
அத்துடன் முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்தநிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் ஸ்ரீ தலதா மாளிகை, யாழ்ப்பாணம் நல்லூர் கோவில், கொழும்பு தாமரை கோபுரம், வரலாற்று சிறப்புமிக்க காலி டச்சு கோட்டை சுவர், பொலன்னறுவை வரலாற்று இடங்கள், சீகிரியா, தேயிலைத் தோட்டம், இறப்பர் வெட்டு உள்ளிட்ட பல புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.