வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அங்கிருந்து வெளியேறியுள்ள...
வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அவரிடம், சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகள் அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இந்தநிலையில், இன்று பிற்பகல் 1 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டேர் அங்கிருந்து வெளியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.