நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை அடையும்வரை நாங்கள் அரசாங்கத்தில் பங்காளிகளாகவோ அமைச்சர்களாகவோ அரசாங்கத்தில் பதவியேற்பவர்கள...
நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை அடையும்வரை நாங்கள் அரசாங்கத்தில் பங்காளிகளாகவோ அமைச்சர்களாகவோ அரசாங்கத்தில் பதவியேற்பவர்களாக இருக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (02-11-2024) கிளிநொச்சி கோனாவில் வட்டாரத்தின் தேர்தல் பரப்பரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதாவது நாங்கள் உரிமைக்காக போராடி வருகின்றோம் இந்த நிலையில் எங்களுக்கான மீளப் பெற முடியாத அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் அவ்வாறு நிலைத்து நிற்க்க கூடிய ஒரு அரசியல் தீர்வு எட்டும் வரை நாங்கள் எமது உரிமைக்காக போராடி போராட வேண்டிய நிலை காணப்படுகிறது.
நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை அடையும்வரை நாங்கள் அரசாங்கத்தில் பங்காளிகளாகவோ அல்லது அமைச்சர்களாகவோ அரசாங்கத்தின் பதவி ஏற்பவர்களாகவோ இருக்க முடியாது.
நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு அதிகாரத்தை சிங்கள தலைமைகள் எப்போது தருகின்றதோ நாங்கள் அப்போது அந்த அரசோடு பங்காளிகள் பற்றி பரிசீலிக்கலாம் அதுவும்.
நாங்கள் நாங்களாக இருப்பதற்கான அனுமதி இல்லாமல் பௌத்த விகாரங்களையும் இராணுவ முகாம்களையும் இராணுவ பிரசன்னங்களையும் வைத்துக்கொண்டு நாங்கள் அமைச்சு பதவி எடுப்பது எந்த வகையில் நியாயமாகும்.
ஆகவே தான் ஒரு நியாயமான உரிமையுடன் வாழ்வதற்கு விரும்புகின்றோம் நாங்கள் நாங்களாக இருப்பதற்கு நாங்கள் பலமாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோனாவில் வட்டாரத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளர் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.