வாகன இலக்கத் தகடு அச்சிடும் நிறுவனத்துக்கு பணம் கொடுப்பத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால், வாகன இலக்கத் தகடு விநியோகிக்கும் பணி தற்காலிகமாக...
வாகன இலக்கத் தகடு அச்சிடும் நிறுவனத்துக்கு பணம் கொடுப்பத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால், வாகன இலக்கத் தகடு விநியோகிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உரிய கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், வாகன உரிமையாளர்களுக்கு வாகன இக்கத் தகடு வழங்கப்படாத காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாகன எண்ணை காகிதத்தில் அச்சிட்டு காட்சிப்படுத்த தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.