எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சசிகலா ரவிராஜின் சின்ன...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சசிகலா ரவிராஜின் சின்னத்தையும் கட்சியையும் தவறாக அச்சிட்டு போலி சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களால் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகள் தென்மராட்சி பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சசிகலா ரவிராஜை தொடர்பு கொண்டு வினவியபோது, மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் குறித்த விடயம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசனம் வெளியிட்டார்.
அத்துடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சாவகச்சேரி தொகுதியைச் சேர்ந்த சிலரினால் குறித்த செயல் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டார்.