தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதற்கும், அதனை இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிப்பதற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானி...
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதற்கும், அதனை இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிப்பதற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே, குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இலங்கை அரசாங்கத்திடம், இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்திய உயர் ஸ்தானிகரிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளது.
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாகவும், மக்களின் அபிவிருத்தி மற்றும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.