யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை போட்டியிட்ட 396 வேட்பாளர்களில் 354 வேட்பாளர்கள் தமது தேர்தல் கணக்கறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர் எ...
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை போட்டியிட்ட 396 வேட்பாளர்களில் 354 வேட்பாளர்கள் தமது தேர்தல் கணக்கறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கணக்கணிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட அவகாசம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வந்த நிலையிலேயே, இதனை அவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இருந்து 23 அரசியல் கட்சிகளும், 21 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டன. இரண்டிலுமாகச் சேர்த்து 396 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.
தேர்தல் முடிவடைந்த பின்னர் வேட்பாளர்கள் தமது கணக்கறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்பது இம்முறை கட்டாய சட்டமாக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என ஒட்டுமொத்தமாக 44 தரப்புக்களில் 36 தரப்புக்களைச் சேர்ந்த வேட்பாளர்களில் 354 வேட்பாளர்கள் தமது தேர்தல் கணக்கறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.