யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை யாழ் ஊடக அமையத்தினரால் மீட்கப்பட்டு , பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ்ப...
யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை யாழ் ஊடக அமையத்தினரால் மீட்கப்பட்டு , பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் ராசாவின் தோட்ட பகுதியில் கைக்குழந்தையுடன் சிறிய வீடொன்றில் வசித்து வந்த குடும்பத்தினரின் வீட்டினுள் வெள்ளம் புகுந்தமையால் , நிர்க்கதியான நிலையில் , அது தொடர்பில் யாழ் ஊடக அமைய தலைவர் கு.செல்வக்குமாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, சக ஊடகவியாளர்களுடன் சென்று , அக்குடும்பத்தினரை மீட்டு வாகனமொன்றில் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்ததுடன் , அவர்களுக்கு ஒரு தொகை பணமும் வழங்கி வைத்தார்.