கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளுமெண்டல் பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய...
கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளுமெண்டல் பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் போதைப்பொருளுடன் நேற்று திங்கட்கிழமை (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புளுமெண்டல் மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் ஆவார்.
சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 12 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றையவரிடமிருந்து 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.