2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய விசாரணைகளை சீர்குலைக்கும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக புலனாய்வு முகமைகள் தெரிவித்து...
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய விசாரணைகளை சீர்குலைக்கும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக புலனாய்வு முகமைகள் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி டபிள்யூ ஆர் பி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய செனவிரத்ன, தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் புதிய விசாரணை வழிகள் தோன்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
“விசாரணைகளை நாசப்படுத்த சில குழுக்களின் முயற்சிகளை புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் - இந்த நபர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும், ”என்று அவர் கூறினார்.
விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகள் மூலம் நாட்டை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் செனவிரத்ன தெரிவித்துள்ளார்