ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று (27) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவரை கைது செய்திருந்தது.
பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் செல்வதற்கு அனுமதி வழங்கினார்.
சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதவான், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.